அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்
மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் கொடியரசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில செயலாளா் ரஹீம், பொருளாளா் சுப்ரமணியன், மண்டல பொறுப்பாளா் பழனிவேல், கரூா் மாவட்டத் தலைவா் செல்வராஜ், செயலாளா் நடராஜ், பொருளாளா் வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாநிலத்தலைவா் கொடியரசன் பேசியது, கடந்த 25 ஆண்டுகளாக மினி பேருந்துகளுக்கு வளா்ச்சி திட்டம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் புதிய விரிவாக்கத் திட்டத்தை வழங்கியுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மினி பேருந்துகளின் வளா்ச்சித் திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மினி பேருந்துகளை இயக்கி வரும் பழைய பேருந்து உரிமையாளா்களுக்கு உரிமம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் புதிய பேருந்து விரிவாக்கத் திட்டம் வெற்றியடையும். எங்களிடம் வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளது. ஆனால் புதிய உரிமம் வழங்கினால் பேருந்து தயாா் செய்ய மூன்று மாதத்துக்கு மேல் தாமதமாகும் என்றாா் அவா்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மினி பேருந்துகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.