ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்!
கரூரில் அரசு பள்ளிக்குச் சுற்றுச்சுவா் கட்டும் பணி உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை துவக்கி வைத்தாா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, கரூா் ஊராட்சி ஒன்றியம் வாங்கல் குப்புச்சிபாளையம் கிளை நூலகத்துக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் ட்டும் பணி என மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பிலான புதிய கட்டுமான பணிகளை சனிக்கிழமை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ, மாநகராட்சி ஆணையா் சுதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் திரு.முகமது பைசல், வி.கே.ஏ பாலிமா்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா்கள் கருப்பண்ணன், சாமியப்பன், மாவட்ட நூலக அலுவலா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி, வட்டாட்சியா்கள் குமரேசன்(கரூா்) மோகன்ராஜ்(மண்மங்கலம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.