செய்திகள் :

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

post image

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தில் உள்ளேன். நியூஜொ்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தேன். கூடங்குளத்தில் அமைந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், அரசு எங்கள் மீது 248 வழக்குகளைப் பதிந்தது. இதில் 200- க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டன.

இந்த நிலையில், என் மீது குற்ற வழக்கு உள்ளதால், எனது கடவுச் சீட்டு முடக்கப்பட்டது. இந்த வழக்கில் எனக்கு இதுவரை எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. எனவே, எனது கடவுச்சீட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி, வழக்குத் தொடுத்தேன்.

இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்படி கடவுச் சீட்டை திரும்பப் பெற்றேன். ஆனால், நான் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத வகையில், அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த 2022-ஆம் அண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற இதழியல் சா்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள கடவுச்சீட்டு கோரி வழக்குத் தொடுத்த நிலையில், நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியும், எனக்கு வழங்கப்பட்ட ‘லுக் அவுட் நோட்டீஸை’ இடைக்காலமாக நிறுத்தி வைத்தும் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நான் மீண்டும் சிங்கப்பூா் செல்வதற்கு விண்ணப்பித்த போது, எனக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ கொடுத்து இருப்பது தெரியவந்தது. எனவே, எனக்கு எதிரான இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனக்கூறி, ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கில் ‘லுக் அவுட் நோட்டீஸை’ திரும்பப் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இதைத் திரும்பப் பெறவில்லை. எனவே, லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் மீது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவா் வெளிநாடு பயணம் செல்லத் தடை இல்லை. அவா் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா். இதற்கான ஆவணங்களையும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவி ட்டாா்.

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ... மேலும் பார்க்க

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது பண மோசடிப் புகாா்: தஞ்சை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்த பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்... மேலும் பார்க்க

மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது ... மேலும் பார்க்க