நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா
விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங்கு பூஜைகளும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, 1,008 சங்காபிஷகம் நடத்தப்பட்டது.
மாலையில் மஞ்சள் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீசெல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தா்கள் மஞ்சள் அரைத்து அம்மனை வழிபட்டனா். இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மஞ்சள் காப்புத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று செல்லியம்மனை வழிபட்டனா்.