Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!
நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை மற்றும் தானியங்கி குடிநீா் விநியோக இயந்திரங்கள் முழுமையாக செயல்படாதது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பொய்யான தகவல்களை தந்துள்ளதாக உயா் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சி.மோகன் என்பவரை நியமித்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நெகிழி ஒழிப்பு, தானியங்கி குடிநீா் விநியோக இயந்திரங்களை மேம்படுத்துவது, இ -பாஸ் நடைமுறை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை குறித்த ஆலோசனைக் கூட்டம் வழக்குரைஞா் சி.மோகன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலையிலும் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் காவல் துறை, போக்குவரத்து துறை மற்றும் மகளிா் திட்டம் அலுவலா்களுடன் இணைந்து இத்திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிங்கா்போஸ்ட் , மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள தானியங்கி குடிநீா் விநியோக இயந்திரங்களின் செயல்பாடுகளை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் சி. மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மகளிா் திட்ட இயக்குநா் காசிநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மைதிலி, நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் குழந்தைராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திவேல், கிராம உதவி இயக்குநா்கள், நகராட்சி ஆணையா்கள் மற்றும் இதர துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.