செய்திகள் :

Kohli: "கோலியால் வாய்ப்பு கிடைத்தது" - இங்கி. எதிரான அதிரடிக்குப் பின் ஸ்ரேயாஸ் பகிர்ந்த சுவாரஸ்யம்

post image

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 6) நாக்பூரில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில், முழங்கால் வலி காரணமாகக் கோலி இறங்கவில்லை. ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று அணியில் இடம்பிடித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 39-வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றியடைந்தது. பேட்டிங்கில், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், அக்சர் படேல் ஆகியோர் அரைசதம் அடித்தனர். குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார். இந்நிலையில், பிளெயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு தனக்கு எப்படிக் கிடைத்தது என்ற சுவாரஸ்யத்தை ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்திருக்கிறார்.

போட்டி முடிந்த பின்னர் இதைப் பற்றிப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், ``அது ஒரு வேடிக்கையான கதை. நேற்றிரவு (போட்டிக்கு முந்தைய நாள் இரவு) திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, கேப்டனிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், `கோலிக்கு முழங்காலில் வீக்கம். அதனால், நீங்கள் விளையாடக்கூடும்.' என்று அவர் கூறினார். பிறகு உடனடியாக அறைக்குத் திரும்பி, சீக்கிரமாகத் தூங்கச் சென்றேன். முதல் போட்டியில் நான் விளையாட வேண்டியதே இல்லை. துரதிர்ஷ்டவசமாகக் கோலி காயமடைந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ரேயாஸ் ஐயர்

இருப்பினும், எனக்கு எந்த நேரத்திலும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிந்ததால், அதற்குத் தயாராக இருந்தேன். ஆசியக் கோப்பையில் இதேதான் எனக்கு நடந்தது. நான் காயமடைந்ததால் வேறொருவர் இறங்கி சதம் அடித்தார். உண்மையைச் சொன்னால், உள்நாட்டுப் போட்டிகளில் முழுமையாக விளையாடியது, ஒரு இன்னிங்ஸை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தது.

ஸ்ரேயாஸ் ஐயர்

திறன்கள் அடிப்படையில் அவ்வப்போது உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்." என்று கூறினார்.

2024-ல் மட்டும் ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி டிராபி, சையது முஷ்டாக் அலி கோப்பை, இரானி கோப்பை ஆகிய உள்நாட்டுத் தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Shubman Gill: `நான் அதுக்காக ஒன்னும் அவுட் ஆகல...' - விமர்சனத்திற்கு பதிலளித்த சுப்மன் கில்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 6) நடந்த முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற... மேலும் பார்க்க

INDvENG: "நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்" -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷித்

வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஐ.பி.எல்லில் கம்பீர் ஆலோசகராகச் செயல்பட்ட கொல்கத்தா அணியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தனது சர்வதேச கிரிக்கெ... மேலும் பார்க்க

காயத்தால் கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்... சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸிக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட்டும், தொடரின் முடிவில் காயமடைந்த கேப்டன் பேட் கம்மின்ஸும் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. எப்படியும், சாம்பி... மேலும் பார்க்க

``இது எளிதான முடிவல்ல; ஆனால்..." - திடீரென ஓய்வை அறிவித்த 2023 உலகக் கோப்பை வின்னர்

இந்திய அணியுடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில... மேலும் பார்க்க

IND vs ENG: 'பும்ரா மாதிரி என்னால விளையாட முடியாது, ஆனா...' - ஹர்திக் பாண்டியா சொல்வதென்ன?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இன்று ஆரம்பமான (பிப்ரவரி 6) முதல் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர... மேலும் பார்க்க

INDvsENG: `கடைசி நேரத்தில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத Kohli; 2 பேர் அறிமுகம்' -ரோஹித்தின் காரணமென்ன?

இன்னும் இரண்டு வாரத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாக்பூரில் இன்... மேலும் பார்க்க