ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்
Shubman Gill: `நான் அதுக்காக ஒன்னும் அவுட் ஆகல...' - விமர்சனத்திற்கு பதிலளித்த சுப்மன் கில்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (பிப்ரவரி 6) நடந்த முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, சுப்மன் கில் சதத்திற்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. எப்படியும் சதத்தை நிறைவு செய்து விடலாம் என சுப்மன் கில் நினைத்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா அப்போது ஒரு சிக்ஸ் அடித்தார்.
![சுப்மன் கில்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/kjg36w2g/AP25037495463812-fotor-2025020619245-2025-02-ab0e6346eb50e2139e136b8a4cdc51bc-16x9.jpg)
அதனால் தனது சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவி போய்விடுமோ என்ற எண்ணத்தில் சுப்மன் கில் அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்தார். அதைத் தொடர்ந்து ஒரு சிக்ஸ் அடிக்க முயன்ற போது கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். அவர் சதம் அடிக்க வேண்டி அவசர, அவசரமாக ஷாட் ஆடிதான் விக்கெட்டை இழந்தார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், நேற்று போட்டி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சுப்மன் கில்லிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ நான் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஷாட்டை விளையாடவில்லை.
![சுப்மன் கில்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/0tcexmcb/shubman-gill-800x600.jpg)
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த நினைத்தேன். வெற்றிக்கு 40 முதல் 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தாலும் அப்படி ஒரு ஷாட்டை ஆடி இருப்பேன் நாட்டுக்காக போட்டியை வெல்வது தான் முக்கியம்” என்று சுப்மன் கில் சமாளித்து இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs