'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்
``பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை செய்தால் இனி இதுதான் தண்டனை...!'' -அன்பில் மகேஸ் எச்சரிக்கை
கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல திருச்சியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டிருக்கின்றனர். பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்.
இந்த சம்பவத்தில் உண்மைதன்மை நிரூபிக்கப்படும் பட்சத்தில், யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டனையுடன் மட்டும் நிறுத்தப்படாது. அவர்களின் கல்வித்தகுதி சான்றுகளை முழுமையாக ரத்து செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்போம். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக் கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs