லிபியா: படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் பலி!
லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 பேர் காவல் துறையின் பிடியில் உள்ளதாகவும், லிபியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் மொராக்கோவில் இருந்து 80 பேருடன் வந்த படகு கவிழ்ந்த விபத்தில் 13 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 44 பேர் மனித கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
லிபியாவின் ட்ரிபோலி பகுதியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் கடவுச்சீட்டுகளை வைத்து அவர்கள் பாகிஸ்தானியர்கள் என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
படகில் வந்த 64 பேரில் 37 பேர் உயிருடன் உள்ளனர். 33 பேர் காவல் துறையினர் விசாரணையிலும் ஒருவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 பேர் இதில் காணவில்லை. மீட்கப்பட்ட உடல்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ளது.
தூதரகத்தைத் தொடர்புகொள்ள எண்களும் வழங்கப்பட்டுள்ளன. எண்கள் - 03052185882, +218913870577, +218 91-6425435 (வாட்ஸ்ஆப்).
இதையும் படிக்க | பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்