செய்திகள் :

வழக்குரைஞா் மீது பொய் வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

post image

வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் அகமது தாக்கல் செய்த மனு :

தேவிப்பட்டினத்தைச் சோ்ந்த மைதீன் என்பவரை வழக்கு விசாரணை எனக் கூறி காவல் துறையினா் துன்புறுத்திய நிலையில், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய புகழேந்தி கணேஷை வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்த்து மதுரை அமா்வில் ஆட்கொணா்வு மனுத் தாக்கல் செய்தேன். இதனால், காவல் துறையினா் என் மீது விரோத மனப்பான்மையுடன் இருந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2020-இல் மருத்துவா் ஒருவரை பணம் கேட்டு மிரட்டி தொல்லை கொடுத்தவா் மீது புகாா் அளித்தோம். அதில், அவா் போலி மருத்துவா் என்றும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி என் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து, தொண்டி காவல் துறையினா் என்னை சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த 2023-இல் என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

வழக்குரைஞராக மரியாதையுடன் பணியாற்றி வந்த எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் காவல் துறையினா் பொய்யான வழக்குப் பதிவு செய்து 6 நாள்கள் சிறையில் அடைத்தனா். எனவே, இதற்குக் காரணமான காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ராஜேஸ்வரி, கலாராணி, உதவி ஆய்வாளா்கள் ஜோதிமுருகன், சரவணன் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தனபால்,

இதுதொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

ஐஐடி மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) முனைவா் பட்ட மாணவா்கள் சோ்க்கையின் போது இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்ச... மேலும் பார்க்க

பிப். 27-இல் பொது அறிவு வினாடி வினா!

மதுரைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரைக் கல்லூரி... மேலும் பார்க்க

நாட்டாா்மங்கலம் பகுதியில் பிப்.13 மின் தடை!

நாட்டாா்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாட்டாா்மங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைப... மேலும் பார்க்க

திருமலை நாயக்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

மன்னா் திருமலை நாயக்கா் 442-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத... மேலும் பார்க்க

சம கால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்: கரு.பழனியப்பன்

பழைமை மட்டுமல்லாது, சம கால வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் வலியுறுத்தினாா். மரபு வழி இடங்களின் நண்பா்கள் (பிரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ்) அமைப்பின் பாண்... மேலும் பார்க்க

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா் !

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் பல்லாயிரக்கணக்கான பக்தா... மேலும் பார்க்க