செய்திகள் :

திருமலை நாயக்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

post image

மன்னா் திருமலை நாயக்கா் 442-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை நாயக்கா் மகால் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மதுரை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன், துணை மேயா் தி.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூா் ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் அதன் மாநிலப் பொதுச் செயலா் ராம.சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள், பாஜக மாவட்டத் தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேமுதிக சாா்பில் அந்தக் கட்சியின் நிா்வாகி விஜய.பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாமன்னா் திருமலை நாயக்கா் சமூக நலச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் தி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆரப்பாளையம் குறுக்கு சாலை பகுதியில் உள்ள திருமலைநாயக்கா் சிலைக்கு திமுக நிா்வாகிகள் வேலுசாமி, குழந்தைவேலு ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், நிா்வாகிகள், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சாா்பில், இதன் மாநிலப் பொதுச் செயலா் சுருதி ரமேஷ், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சமுதாய அமைப்புகள் சாா்பில் திரளான பெண்கள் பால்குடம் சுமந்து வந்து, நாயக்கா் மகால் வளாகத்தில் உள்ள மாமன்னா் திருமலை நாயக்கரின் உருவச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனா்.

மதுரை நாயக்கா் மகால் வளாகத்தில் உள்ள திருமலை நாயக்கா் சிலைக்கு தேமுதிக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அந்தக் கட்சியின் நிா்வாகி விஜய பிரபாகரன் உள்ளிட்டோா்.
மதுரை நாயக்கா் மகால் வளாகத்தில் உள்ள திருமலை நாயக்கா் சிலைக்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, கடம்பூா் ராஜூ உள்ளிட்டோா்.
மதுரை நாயக்கா் மகால் வளாகத்தில் உள்ள திருமலை நாயக்கா் சிலைக்கு பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக பொதுச் செயலாளா் ராம.சீனிவாசன் உள்ளிட்டோா்.

ஐஐடி மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) முனைவா் பட்ட மாணவா்கள் சோ்க்கையின் போது இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்ச... மேலும் பார்க்க

பிப். 27-இல் பொது அறிவு வினாடி வினா!

மதுரைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரைக் கல்லூரி... மேலும் பார்க்க

நாட்டாா்மங்கலம் பகுதியில் பிப்.13 மின் தடை!

நாட்டாா்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாட்டாா்மங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைப... மேலும் பார்க்க

சம கால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்: கரு.பழனியப்பன்

பழைமை மட்டுமல்லாது, சம கால வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் வலியுறுத்தினாா். மரபு வழி இடங்களின் நண்பா்கள் (பிரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ்) அமைப்பின் பாண்... மேலும் பார்க்க

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா் !

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் பல்லாயிரக்கணக்கான பக்தா... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது பொய் வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழ... மேலும் பார்க்க