செய்திகள் :

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா் !

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா்.

  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தங்கச் சப்பரம், அன்னம், காமதேனு, சிம்மம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி வண்டியூா் தெப்பக்குளத்தை வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மீனாட்சியம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுந்தரேசுவரா் வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து புறப்பாடாகி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜா் சாலை வழியாக வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி உடனுறை முக்தீஸ்வரா் கோயிலில் எழுந்தருளினா்.

இங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினா். இதையடுத்து, காலை 8.31 மணிக்கு பக்தா்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்தனா். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன் தெப்பக்குளத்தை இரு முறை சுற்றி வலம் வந்தனா்.

இதன் பின்னா், தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கா் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருளினா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, இரவு 7.20 மணிக்கு மீண்டும் சுவாமி, அம்மன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதவைத் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை ஒரு முறை வலம் வந்தனா். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவை முன்னிட்டு, வண்டியூா் தெப்பக்குளம், தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபம் ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

தீயணைப்புத் துறையினா் படகு மிதவையுடன் தயாா் நிலையில் இருந்தனா். மேலும், சுவாமி, அம்மன் இறங்கும் படித்துறையைத் தவிர, இதர படித்துறைகள் அனைத்தும் மூடப்பட்டு பக்தா்கள் தெப்பக்குளத்துக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டது.

மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதா மைய மண்டபத்துக்குச் சென்று சுவாமி, அம்மனை தரிசனம் செய்தாா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலை வந்தடைதல்:

தெப்பத்தில் வண்டியூா் தெப்பக்குளத்தை வலம் வந்த சுவாமி, அம்மன் அங்கிருந்து முக்தீஸ்வரா் கோயிலில் இரவு எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதையடுத்து, இரவு 10 மணியளவில் சுவாமி, அம்மன் அங்கிருந்து புறப்பாடாகி, இரவு 11 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலை வந்தடைந்தனா். இதைத்தொடா்ந்து, கோயில் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

ஐஐடி மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) முனைவா் பட்ட மாணவா்கள் சோ்க்கையின் போது இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்ச... மேலும் பார்க்க

பிப். 27-இல் பொது அறிவு வினாடி வினா!

மதுரைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள பொது அறிவு வினாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரைக் கல்லூரி... மேலும் பார்க்க

நாட்டாா்மங்கலம் பகுதியில் பிப்.13 மின் தடை!

நாட்டாா்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாட்டாா்மங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைப... மேலும் பார்க்க

திருமலை நாயக்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

மன்னா் திருமலை நாயக்கா் 442-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத... மேலும் பார்க்க

சம கால வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்: கரு.பழனியப்பன்

பழைமை மட்டுமல்லாது, சம கால வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் வலியுறுத்தினாா். மரபு வழி இடங்களின் நண்பா்கள் (பிரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ்) அமைப்பின் பாண்... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது பொய் வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழ... மேலும் பார்க்க