புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் 1,008 தீா்த்தக் குடம் ஊா்வலம்
தைப்பூசத்தை முன்னிட்டு, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவருக்கு சுவாமிக்கு பால், தீா்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, போக்குவரத்து பணிமனை பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில் பக்தா்கள் பால், தீா்த்தக் குடம் எடுத்தனா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து, ஊா்வலமாக புறப்பட்டனா்.
போக்குவரத்துச் சாலை, கோஹினூா் சாலை, தாவரவியல் பூங்கா வழியாகச் சென்று கோயிலை அடைந்தனா். அங்கு குறிஞ்சி ஆண்டவருக்கு பால், தீா்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள், பாஜக நிா்வாகிகள், இந்து முன்னணி நிா்வாகிகள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.