செய்திகள் :

ரஜினி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கோவாவில் தற்கொலை - போலீஸ் விசாரணை!

post image
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி (44) தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினி நடித்த கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் மேலும் பிரபலமாக அறியப்பட்டவர் கே.பி.சௌத்ரி. கோவாவில் சியோலிம் பகுதியில் வாடகை வீட்டில் இவர் வசித்துவந்த நிலையில், நேற்று வெகுநேரமாக அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால், அங்கிருந்தவர்கள் சந்தேகித்து உள்ளே நுழைந்தபோது அவர் தூக்கில் இறந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கே.பி.சௌத்ரி

பின்னர், உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கு வந்த போலீஸார், உடலை மீட்டனர். போலீஸின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்கொலைக்கான கரணம் என்னவென்று அறிய போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அக்ஷத் கௌஷால், அஞ்சுனா காவல் நிலையத்தின் சியோலிம் புறக்காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் கிடைத்ததாகவும், தற்போது விசாரணை நடைபெற்றுவருவதால் விவரங்கள் சரியான நேரத்தில் பகிரப்படும் என்றும் கூறினார்.

2023-ல் ஆண்டு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக் குழு இவரைக் கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கீரவாணி வீட்டு கல்யாணம்; ராஜமௌலி செலெக்ட் செய்த 'மாதம்பட்டி விருந்து' - என்னென்ன உணவுகள் இருந்தன?

ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணியின் இளையமகன் நடிகர் சிம்ஹா கொடுரியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி யு.ஏ.இ-யில் நடைபெற்றது. மூத்த நடிகர் முரளி மோகனின் பேத்தி ராக மாதங்கியை மணந்தார்.இந்த த... மேலும் பார்க்க

Rashmika Mandanna: 'இதுபோதும்; சந்தோஷமாக ஓய்வு பெற தயார் என்றேன்' - ராஷ்மிகா பேசியது என்ன?

புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமா... மேலும் பார்க்க

Ram Gopal Varma:``சத்யா படத்தின் வெற்றி என்னைக் கண்மூடித்தனமாக்கியது''- ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான `சத்யா' திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.இந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்த்த பிறகு ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் நீ... மேலும் பார்க்க

DaakuMaharaaj Review: `நூடுல்ஸுக்கு தான் 2 மினிட்ஸ், எனக்கு 2 செகண்ட்ஸ்' - பாலைய்யா வென்றாரா?

'அகண்டா', 'வீர சிம்ஹா ரெட்டி', 'பகவந்த் கேசரி' என ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணா ஆடியிருக்கும் தாண்டவமே இந்த 'டாக்கு மஹாராஜ்'. பாபி கொல்லி இயக்கத்தில் தமன் இசையில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெ... மேலும் பார்க்க

Game Changer Review: 'அக்கறை' அரசியல், பார்முலா காதல் காட்சிகள், பிரமாண்டங்கள் - இவை மட்டும் போதுமா?

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார் ராம் நந்தன் (ராம் சரண்). தனது மாவட்டத்திலிருந்து குற்றவாளிகளை அகற்றும் பணியில், ஆளும் கட்சியின் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமா... மேலும் பார்க்க

Game Changer விழா: விபத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு ராம் சரண் ரூ.10 லட்சம் நிதியுதவி

ஆந்திர பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமஹேந்திரவரம் நகரில் ராம் சரணின் கேம் சேஞ்ஜர் படத்துக்கான புரமோஷன் விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற... மேலும் பார்க்க