செய்திகள் :

Chennai Fog : சென்னையில் கடும் பனிமூட்டம்... விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி

post image
சென்னையில் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகின.

பனிமூட்டத்தால் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டத்தால், 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

குவைத்திலிருந்து பயணிகளுடன் வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து. அதோடு, இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. செங்கல்பட்டிலிருந்து கடற்கரை மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

இதனால், புறநகர் ரயில்களில் பயணித்து வேலைக்குச் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் சாலைகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.

Japan: `சுனாமி வரலாம்..' - ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்!

ஜப்பானின் உள்ளூர் நேரமான இரவு 9.19 அளவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்திய நேரப்படி, கிட்டதட்ட மாலை 6 மணி ஆகும். இந்த நிலநடுக்கம் தென் மேற்கு ஜப்பானி நிகழ்ந்துள்ளது. "இந்த நிலநடு... மேலும் பார்க்க

Los Angeles: 10,600 ஏக்கரைக் கடந்து பரவும் காட்டுத் 'தீ' ; 5 பேர் பலி; அப்புறப்படுத்தப்படும் மக்கள்!

அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகல் காட்டுத்தீக்கு இரையாகியிருக்கிறது. இரண்டு வாரத்துக்கும் மேலாக எரிந்த... மேலும் பார்க்க

Earthquake: நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம்; பீகார், அஸ்ஸாமிலும் உணரப்பட்ட தாக்கம்

2025-ம் ஆண்டு தொடங்கிய 7 வது நாளில் இந்தியாவின் அண்டை நாடானா நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப... மேலும் பார்க்க

Ooty Frost: அவலாஞ்சியில் மைனஸ் டிகிரிக்கு கீழ் சரிந்த வெப்பநிலை... ஊட்டியை நடுங்க வைக்கும் உறைபனி!

கடல் மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஊட்டியில் பனிக்காலங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி நிலவும். அவலாஞ்ச... மேலும் பார்க்க