Japan: `சுனாமி வரலாம்..' - ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்!
ஜப்பானின் உள்ளூர் நேரமான இரவு 9.19 அளவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்திய நேரப்படி, கிட்டதட்ட மாலை 6 மணி ஆகும். இந்த நிலநடுக்கம் தென் மேற்கு ஜப்பானி நிகழ்ந்துள்ளது.
"இந்த நிலநடுக்கம் ஒரு மீட்டர் அளவிலான சுனாமியாகக் கூட மாறலாம். மக்கள் கடலோர பகுதிகளில் இருக்க வேண்டாம்' என்று ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க வானிலை மையம், "ஜப்பானில் நிகழ்ந்துள்ள நிலநடுக்கம் மிக வலுவனதாக இருந்தாலும், அதன் விளைவுகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இது சுனாமியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்று கூறியுள்ளது.
ஜப்பானுக்கு சுனாமி புதிது அல்ல. 'நெருப்பு வளையம் (Ring of Fire)' பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. அதாவது குதிரை காலணி வடிவிலான பகுதி. இந்தப் பகுதியில் ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். இந்தப் பகுதியில் நில நடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
பொதுவாகவே, ஜப்பான் நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதுப்போலத் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை மையம் ஜப்பானுக்கு நில நடுக்க எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.