உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்
நகைப் பட்டறை உரிமையாளா் தற்கொலை
கடன் தொல்லையால் நகைப் பட்டறை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை காமராஜா் சாலை, சாலை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் விஜேஸ்வரன் (49). மதுரை நகைக்கடை பஜாரில் நகைகளுக்கு மெருகேற்றும் பட்டறை வைத்து நடத்தி வந்தாா். இவா் பலரிடம் கடன் பெற்ால் கடன் தொல்லை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].