செய்திகள் :

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

post image

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக 2026 காளைகளும், 1735 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்.

அவனியாபுரம் மந்தை அம்மன் கோவிலில் கிராம கமிட்டி, மாநகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் சார்பாக சாமி கும்பிடப்பட்டு வாடிவாசலில் பூஜையில் நடைபெற்றது. அதன்பின்னர், உறுதிமொழி எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு களத்தில் விளையாடத் தகுதியுள்ள 1100 வீரர்களும் 900 காளைகளும் அனுமதிக்கப் பட்டனர்.

இதற்கிடையே போட்டி நடைபெறவுள்ள அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மந்தையம்மன் கோவில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அம்பேத்கர் சிலை வரையும், அதனைத் தாண்டி அவனியாபுரம் பேருந்து நிலையம் எதிரே செல்லும் சாலை வரை 1.8 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கம்புகள் மற்றும் இரும்புத் தடுப்புகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று புறவாடியான, வாடிவாசல் பின்புறம் காளைகள் வரிசையாக வந்து செல்வதற்கு ஏதுவாக திருப்பரங்குன்றம் சாலையில் ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி சார்பாக வேட்டி, துண்டு, குத்துவிளக்கு, அண்டா, கட்டில், பீரோ, சைக்கிள், தலையணை, மெத்தை, செல்பேசி, தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.

விளையாட்டில் காயமடையும் வீரர்களை உடனடியாக மீட்பதற்கு செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வாடிவாசல் அருகே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு 50 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் கொண்ட 5 மருத்துவக்குழுக்களும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் 5-க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் தயார்நிலையில் உள்ளன.

காயம்படும் காளைகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு 20-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அவற்றின் மேல்சிகிச்சைக்காக 3 கால்நடை அவசர ஊர்திகளும் மதுரை மாநகராட்சி மற்றும் கால்நடைத்துறை சார்பாக தயார்நிலையில் உள்ளன.

புறவாடி, காளைகள் வந்து சேருமிடம், அவனியாபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் சுற்று முடிவில் தலா 2 மாடுகளை பிடித்த மணிகண்டன், மற்றும் சுஜித்குமார் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

முடிவில் வெற்றி பெறும் காளைகளுக்கு டிராக்டரும் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு

அருப்புக்கோட்டையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், எம். ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாம... மேலும் பார்க்க

மதுக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் 10 மதுபானக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்ல... மேலும் பார்க்க

மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி தினசரி மலா்ச் சந்தையில் பூக்களின் விலை திங்கள்கிழமை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மல்லிகை, பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ. 2 ஆயிரத்துக்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: போலி டோக்கன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போலி டோக்கன் கொண்டு வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை இளமனூா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, பொங்கல் விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ராம... மேலும் பார்க்க