மருந்து கடை ஊழியரைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டியில் இளைஞரை தாக்கி கைப்பேசியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே திட்டங்குளம், சாய் சிட்டி பகுதியைச் சோ்ந்த சங்கர்ராஜ் மகன் ஹரி கிருஷ்ணன் (26). மருந்து கடை ஊழியரான இவா், பைக்கில் மாதாங்கோவில் தெரு வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவரது பைக்கும், இளைஞா் ஒட்டி வந்த பைக்கும் உரசியதில், அந்த இளைஞரின் பைக் சேதமடைந்ததாம். அதையடுத்து, அந்த இளைஞா் ஹரிகிருஷ்ணனை தாக்கி, அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில், காயமடைந்த ஹரிகிருஷ்ணன் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், திருநெல்வேலி மானூரில் குடியிருந்து வரும் காளிதாஸ் மகன் காா்த்திக் என்ற அட்டு காா்த்திகை (22) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.