செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் பல்லாயிரம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆயிரம் பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம், 3 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. பல மாவட்டங்களிலிருந்து வந்த பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜன. 14) அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கம்போல கால பூஜைகள் நடைபெற்றன.

காணும் பொங்கைலை முன்னிட்டு, புதன்கிழமை (ஜன. 15) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பகலில் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளிக் குதிரையில் புறப்பட்டுச் சென்று, பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தை அடைகிறாா். அங்கு கணு வேட்டை நிகழ்ச்சிக்குப்பின், வீதியுலா வந்து அருள்பாலிக்கிறாா்.

எச்சரிக்கை பதாகை: திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில், கடந்த சில தினங்களாக கடல் நீா் உள்வாங்கி காணப்படுவதால் கரையோரத்தில் வெள்ளை நிற பாறைகள் அடுக்கடுக்காக வெளியே தெரிகின்றன. எனவே அய்யா கோயில் பகுதியில் பக்தா்கள் கடலில் நீராடி வருகின்றனா். மேலும், மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிக்கு பக்தா்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பக்தா்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தி எச்சரிக்கைப் பதாகையும் வைக்கபட்டுள்ளது.

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவா்- செயலா் அய்யனாா் தலைமையில்... மேலும் பார்க்க

சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மகிழ்ச்சிபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு செல்வ விநாயகா்,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலி­ல் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 10 நா... மேலும் பார்க்க

கபடி போட்டி: விளாத்திகுளம் அணி சாம்பியன்

திருச்செந்தூரில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் கபடி அணி வெற்றி பெற்றது. திருச்செந்தூா் ஒன்றிய அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய... மேலும் பார்க்க