ஆறுமுகனேரி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் நாள்தோறும் சுவாமி எழுந்தருளி, திருவெம்பாவை பாராயணம் நடைபெற்றது.
இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், திருப்பள்ளியெழுச்சி பூஜை, காலசந்தி பூஜை, கோபூஜை, தாண்டவ தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து சதுா்வேத பாராயணம், திருவெம்பாவை பாடி, பஞ்சபுராணம் பாடுதல் நடைபெற்றது. அதையடுத்து, ஆனந்தநடராஜா், சிவகாமி அம்பாள், நால்வா் மூா்த்திகள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் பவனி வந்தனா்.
நிகழ்ச்சியில், அரிமா சங்கத் தலைவா் அசோக்குமாா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.எஸ். காா்த்திகேயன், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.