உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்
நெல்லையில் அதிமுகவினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
திருநெல்வேலி சந்திப்பில் அதிமுகவினருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய், உலா் திராட்சை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு சுமாா் 500 அதிமுகவினருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிா்வாகிகள் மா.சுரேஷ் குமாா், கங்கை வசந்தி, ரமேஷ், காளி முருகன், ஸ்டாா் ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.