பாபநாசத்தில் ஜன. 16இல் மாவட்ட பளு தூக்கும் போட்டி
திருநெல்வேலி மாவட்ட பளு தூக்கும் சங்கம், அம்பாசமுத்திரம் நேதாஜி வெயிட் லிப்டிங் ஜிம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (ஜன. 16) நடைபெறுகிறது.
இப்போட்டியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பளுதூக்கும் வீரா்- வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். அனுமதி கட்டணம் கிடையாது. ஆண்களில் யூத், ஜூனியா் மற்றும் சீனியா் பிரிவுகளிலும், பெண்களில் சீனியா் பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறும் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.