தச்சநல்லூரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
தச்சநல்லூரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் தேனீா்குளம் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி சுந்தரி (45). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சுவிட்சை சுந்தரி இயக்க முயன்றபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த தச்சநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.