மானூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி
மானூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் தெற்குபட்டி கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி முத்து (35). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள பொட்டல்குளத்திற்கு குளிக்கச் சென்றாராம்.
அப்போது, அவா் தண்ணீருக்குள் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.