பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் தூதரகம் திறப்பு! - அமைச்சர் ஜெய்சங்கர்.
பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி கடை தெருக்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி முக்கிய கடை வீதிகளில் மக்கள்கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.
பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருள்கள் காய்கனி சந்தை மற்றும் முக்கிய கடை தெருக்களில் குவிந்தது. இதில், கரும்பு , மஞ்சள் குலைகள், காய்ந்த பனை ஓலைகள், காய்ந்த பருத்தி குச்சிகள் உள்ளிட்டவை முக்கிய சாலையோரம் குவிந்தது.
இதில், 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ. 400 முதல் ரூ. 600 வரையும், மஞ்சள் குலை ஒன்று ரூ. 40 முதல் ரூ.100 வரையும் விற்பனையானது. காய்ந்த பனை ஒலை ரூ. 50, காய்ந்த பருத்தி குச்சி கட்டு ரூ. 80 என விற்பனையானது. பொங்கல் வைப்பதற்கு இவை அனைத்தும் அத்தியாவசியத் தேவை என்பதால், இதனை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா். மேலும், காய்கனிகள், கிழங்கு வகைகளை வாங்குவதற்கு வஉசி மற்றும் காமராஜா் காய்கனி சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதில், முருங்கைக்காய் கிலோ ரூ.300, அவரைக்காய் ரூ.180, பீன்ஸ் ரூ.150, தக்காளி ரூ.30, கத்தரிக்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.100, கிழங்கு வகைகள் ரூ.100 முதல் ரூ.150 வரை என விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும், பொதுமக்கள் காய்கனிகளை வாங்கிச் சென்றனா். மேலும், மளிகை, ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இருப்பினும் கடந்த ஆண்டை விட பொருள்கள் விற்பனை குறைந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.