செய்திகள் :

TVK : `தீவிர ரசிகர்; ஆக்டிவ் நிர்வாகி’ - தவெக கோவை மாவட்ட செயலாளராக ஆட்டோ ஓட்டுநரை நியமித்த விஜய்

post image

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஓராண்டை கடந்துவிட்டது. தற்போது வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர அரசியலில் இறங்க போகிறார்.

தவெக விஜய்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. தவெகவில் நிர்வாக ரீதியாக கோவை மாவட்டத்தை கோவை மாநகர், வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நான்காக பிரித்துள்ளனர்.

இதில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். தீவிர விஜய் ரசிகர். தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றில் ஆக்டிவாக இருந்துள்ளார்.

தவெக மாவட்ட செயலாளர் - ஆட்டோ ஓட்டுநர்

அதன் தொடர்ச்சியாக தவெக மாவட்ட செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. “வலிமையான மாவட்ட செயலாளர் பதவியை விஜய் சாதாரண ஒருவருக்கு வழங்கியுள்ளார்.” என தவெகவினர் இதை கொண்டாடி வருகிறார்கள்.

இதுகுறித்து பாபு கூறுகையில், “பொதுவாக அரசியல் கட்சிகளில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படும். மாற்று அரசியலை முன்னிறுத்தும் எங்கள் தலைவர் ஆட்டோ ஓட்டுநரான என்னை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

தவெக மாவட்ட செயலாளர் - ஆட்டோ ஓட்டுநர்

தலைவரின் வழிகாட்டுதலின் படி மக்களின் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பணியாற்றுவோம்.” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருப்பரங்குன்றம்: ``சகோதரத்துவ தமிழக மக்களை சீண்டும் தேவையற்ற நடவடிக்கை" - திமுக-வை சாடும் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பாக பிப்ரவரி 4-ல் (இன்று) போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்ததைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்... மேலும் பார்க்க

'இது எவ்வளவு பெரிய அவமானம்' - பெண் ஏடிஜிபி விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது.... மேலும் பார்க்க

`இந்தியா சரியான முடிவெடுக்கும்...' - சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தன் நாட்டிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்... மேலும் பார்க்க

`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது, ``மத்திய பட்ஜெட் நாளில் நிதியமைச்சருக்கு, கு... மேலும் பார்க்க

`பதவி வேண்டுமா, திமுக வீழ்த்தப்பட வேண்டுமா? முடிவு செய்து கொள்ளுங்கள்’ - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவ... மேலும் பார்க்க