செய்திகள் :

`The Migrant Mother' : இந்த புகைப்படம் பிரபலம் ஆனது ஏன்? | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அமெரிக்க வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 'The Great Depression' என்ற வார்த்தை கண்ணில் படும்.

'The Great Depression' என்றவுடன் ஏதோ உளவியல் சார்ந்த விஷயம் என நினைத்து விட வேண்டாம். 1929 ல், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தான் அது குறிக்கிறது.

முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் நடுவே நடந்த இந்தச் சம்பவம், அமெரிக்காவில் ஆரம்பித்து அமிஞ்சிக்கரை வரை, நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்தது. இக்காலத்தை வரலாற்றில் 'The Great Depression Era' என்பார்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை ஆட்டம் காண வைத்த 'The Great Depression' என்றால் என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைப் பற்றியெல்லாம் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.

சித்தரிப்புப் படம்

மாறாக, அச்சம்பவத்தின் அடையாளமாக மாறிப் போன ஒரு புகைப்படத்தைப் பற்றித் தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.

'The Migrant Mother' எனும் இப்புகைப்படம், 1936-ல் எடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படங்களுள் ஒன்றாக பார்க்கப்படும் இது, தற்போது நியூயார்க்கின் Museum of Modern Art ல் இருக்கிறது.

கறை படிந்த அழுக்குத் துணியுடன் கன்னத்தில் கை வைத்தவாறு, தூரமாய் பார்வையைச் செலுத்தும் ஓர் பெண்மணி. அவள் கண்களில் சோர்வு. முகத்தில் வெறுமை. அதில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் வறுமையின் சுருக்கங்கள். மடியில் ஒரு கைக் குழந்தை. இரண்டு பக்க தோள்களிலும் முகத்தைப் புதைத்துக் கொண்டு நிற்கும் இரு வேறு குழந்தைகள்.

'வறுமை‌ என்ற சொல்லுக்கு வடிவம் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்' என்ற அளவுக்கு அமெரிக்கப் பத்திரிகைகளில் அப்போதே இப்புகைப்படம் பிரபலம் ஆனது.

புகழ் பெற்ற இப்புகைப்படத்தை எடுத்தவர், Dorothea Lange. இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர். Lange, சிறுவயதில் இருந்தே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், 'The Great Depression' சமயத்தில் தான் புகழ் பெற்றார்.

அமெரிக்க அரசு அப்போது, 'Resettlement Administration (RA)' எனும் மீள்குடியேற்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதாவது, நிலத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்யும் திட்டம்‌.

சித்தரிப்புப் படம்

அதன் ஒரு பகுதியாக, அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களைப் படமெடுத்து, ஆவணப்படம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்தது RA. அக்குழுவின் ஓர் உறுப்பினராக Lange இருந்தார். அப்போது அவர் எடுத்தப் புகைப்படம் தான் 'The Migrant Mother'.

சரி, புகைப்படக் கதைக்கு வருவோம். யார் இந்த Migrant Mother?

பட்ட காலிலே படும் என்பார்களே. அது போல 'The Great Depression', அமெரிக்காவை ஒருபக்கம் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த அதே வேளையில், புயல் காற்று வீசி மக்களை திணறச் செய்தது‌.

இரண்டாலும் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆங்காங்கே கூடாரம் அமைத்துத் தற்காலிகமாகத் தங்கி இருந்தனர்‌. புலம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தனர்‌. அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இந்த Migrant Mother.

Florence Owens Thompson.

இவர் அமெரிக்காவின் Oklahoma பகுதியைச் சேர்ந்தவர். பதினேழு வயதில் திருமணம் செய்து கொண்ட Thompson, திருமணமான பத்தே வருடங்களில் ஆறு குழந்தைகளுக்குத் தாயானார்.

ஆறாவது குழந்தையைக் கருவில் சுமந்தபோது, கணவர் காசநோய் பாதித்து இறந்துவிட, வெவ்வேறு தொழில்கள் செய்து தனி ஆளாக அத்தனை குழந்தைகளையும் காப்பாற்றி வந்திருக்கிறார் Thompson. (அடுத்த சில வருடங்களில் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு, மீண்டும் நான்கு குழந்தைகளுக்குத் தாயானார் என்பது வேறு கதை)

அமெரிக்க புகைப்பட கலைஞர் Dorothea Lange

'புலம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்த மக்களை நான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் கூடாரம் அமைத்துத் தங்கி இருந்தனர். அந்தக் கூடாரங்களின் மத்தியில், ஒரு காந்தம் போல அந்தப் பெண் என்னை ஈர்த்தாள். அவளைச் சுற்றி நிறைய குழந்தைகள் இருந்தனர். அவர்களை எதிர் கொள்ளவே எனக்குச் சிரமமாக இருந்தது. காரின் சக்கரங்களை விற்று அவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள்' என ஒரு நேர்காணலில் Thompson ஐ பற்றி Lange நினைவு கூறியுள்ளார்.

மொத்தம் ஆறு புகைப்படங்களை Lange எடுத்ததாகத் தெரிகிறது. அதில் ஆறாவது புகைப்படம் தான், இந்த Migrant Mother. (மற்ற ஐந்து புகைப்படங்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன).

புகைப்படம் எடுத்தக் கையோடு அடுத்த நாளே, அதை San Francisco வின் தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் Lange (RA ன் அனுமதியைப் பெற்றாரா எனத் தெரியவில்லை). மறுநாள் புகைப்படத்தோடு சேர்த்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது அந்நாளிதழ். அன்று முதல் வெவ்வேறு நாளிதழில் இப்புகைப்படம் வெளியாகி பிரபலம் ஆனது.

இதில் இருப்பது Thompson தான் என்கிற அடையாளம், 1976 ல் தான் வெளி உலகிற்கு தெரிந்திருக்கிறது. Modesto Bee எனும் பத்திரிகையை, நேரடியாகத் தொடர்பு கொண்டு தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் Thompson.

'Lange என்னைப் புகைப்படம் எடுத்தபோது, அதை வெளியிட மாட்டேன் என உறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் காப்பற்றவில்லை. இப்புகைப்படம் மூலம் நான் எவ்வித பலனும் அடையவில்லை...'

பின்னாளில் ஒரு நேர்காணலில் Thompson கூறிய வார்த்தைகள் இவை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, Thompson California வின் Modesto எனும் ஊரில் குடியேறினார். தன்னுடைய கடைசி காலத்தை Thompson அங்கே தான் செலவிட்டார்.

1983 ம் ஆண்டு தன்னுடைய 80 வது வயதில் இயற்கை எய்தினார் Thompson. இறக்கும் தருவாயில் கூட, ஏழ்மை அவரைச் சூழ்ந்திருந்தது.

Thompson ன் மறைவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர், Ronald Reagan இரங்கல் செய்தியை வெளியிட்டார். அதில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்:

'நாடு பொருளாதார தேக்கத்தில் சிக்கிக் கொண்டிருந்த போது, வலிமையாகவும் நம்பிக்கையுடனும் இருந்த பல அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக Thompson இருந்திருக்கிறார். அவருடைய இழப்பு வேதனை அளிக்கிறது'

அமெரிக்கா வல்லரசு நாடாக உருவாகிக் கொண்டிருந்த வேளையில், The Great Depression அதன் மேல் விழுந்த முதல் பெரிய அடி. அதை என்றும் அமெரிக்கா மறக்கப் போவதில்லை. 'The Great Depression' ஐ மட்டுமல்ல, Migrant Mother எனும் Florence Owens Thompson யும் தான்.

- சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

'புதிய கற்கால கருவிகள், இரும்புக் கால பாத்திரங்கள்...' - சென்னனூர் அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள்

"தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்ற என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வி... மேலும் பார்க்க

ஆல்பிரட் நோபல் `மரண வியாபாரி’ என்ற அடையாளத்தை துடைத்து எறிந்தது எப்படி?| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோஹினூர் - ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு | My Vikatan

இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022 இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது.இங்கிலாந்து அரசிடமிருந்து மீட்டு, கோஹினூர... மேலும் பார்க்க

175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகிறதா?

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சல்லிவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன ஊட்டி நகரை நிர்மாணித்தனர். 'ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பியதுடன் பல்வேறு கட்டுமானங்களைய... மேலும் பார்க்க