Siragadikka aasai : ஒன்று சேர்ந்த வில்லிகள், 2k கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ஸ...
சரிவிலிருந்து மீண்ட ரூபாயின் மதிப்பு..!
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(பிப். 4) காலை 13 காசுகள் உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை(பிப். 3) ரூபாயின் மதிப்பு 87.11 என்ற நிலையை எட்டியதுடன் டாலருக்கு நிகரான கணிசமான சரிவையும் கண்டது.
இந்த நிலையில், மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னரே அமல்படுத்தப்படுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(பிப். 3) தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 86.98 ஆக உயர்ந்து வர்த்தகமாகிறது.