செய்திகள் :

கடும் சரிவில் பங்குச்சந்தை! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

post image

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.43 மணியளவில் சென்செக்ஸ் 594.88 புள்ளிகள் குறைந்து 76,911.08 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 212.95 புள்ளிகள் குறைந்து 23,269.20 புள்ளிகளில் முடிந்தது.

இன்று பங்குச்சந்தை சரிவினால் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஃப்டியில் பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

அதே நேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், எல்&டி, பிபிசிஎல், என்டிபிசி, கோல் இந்தியா ஆகியவை நஷ்டமடைந்த நிறுவனங்களாகும்.

நுகர்வோர் சாதனங்கள் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் சரிவில் உள்ளன.

பிஎஸ்இ மிட்கேப் 1 சதவீதமும், ஸ்மால்கேப் கிட்டத்தட்ட 2 சதவீதமும் சரிந்தன.

ரூபாயின் மதிப்பு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகச் சரிந்துள்ளது.

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ... மேலும் பார்க்க

ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!

2025 - 26 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ. 1 லட்சம் அல்லது ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை ஊதி... மேலும் பார்க்க

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.மும்பை பங்குச... மேலும் பார்க்க

பட்ஜெட் எதிரொலி: ரூ. 62,000-யைக் கடந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.6... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை இன்று செயல்படுகின்றன. அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை... மேலும் பார்க்க

பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க