பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!
பட்ஜெட் எதிரொலி: ரூ. 62,000-யைக் கடந்த தங்கம் விலை!
மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60,000-யைக் கடந்து புதிய உச்சம் தொட்டது.
அதன்பிறகும் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரன் ரூ. 62,000-யைக் கடந்துள்ளது.
இதையும் படிக்க | மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?
சென்னையில் இன்று(பிப். 1) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 61,960-க்கு விற்பனையானது.
தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று மாலை தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ. 360 உயர்ந்து ரூ.62,320-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 7,790-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.