செய்திகள் :

அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஜென் 3 ஸ்கூட்டர்!

post image

புதுதில்லி: ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஜென் 3 எஸ் 1 ஸ்கூட்டர்களுடன் தனது ஜென் 2 ஸ்கூட்டர்களை தொடர்ந்து விற்பனை செய்யா உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா ஜென் 2 ஸ்கூட்டர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது. இது எஸ் 1 ப்ரோ, எஸ் 1 எக்ஸ் + அதாவது 2 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 4 கிலோவாட் மாடல்களுக்கு தலா ரூ.1,14,999, ரூ.69,999, ரூ.79,999 மற்றும் ரூ.89,999 முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பவிஷ் அகர்வால் தெரிவித்ததாவது:

எங்கள் முதல் தலைமுறை ஸ்கூட்டர், வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ள மின்சார மாடலாக அமைந்தது. இது நாட்டில் மின்சார வாகன புரட்சியைத் தொடங்கியது.

ஜென் 2 உடன், நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை ஸ்மார்ட்டாகவும், போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதன் மூலம் அணுகக்கூடியதாகவும் மாற்றியது ஓலா. இன்று ஜென் 3 உடன், இ.வி. 2 வாட் தொழில்துறையை, 'அடுத்த நிலைக்கு' கொண்டு செல்கிறோம்.

ஜென் 3-வில் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் நிர்ணயித்த வரையறைகளை மீண்டும் கடைபிடித்து வருகிறது ஓலா. இது தொழில்துறையை மீண்டும் மாற்றும், என்றார் அகர்வால்.

ஜென் 3 போர்ட்ஃபோலியோவில் முதன்மையாக எஸ் 1 ப்ரோ+ 5.3 கிலோ வாட் பேட்டரி விருப்பங்களில் கிடைக்கும் மாடலின் விலை ரூ.1,69,999 மற்றும் 4 கிலோ வாட் மாடலின் விலை ரூ.1,54,999 ஆகும். மேலும் 3 கிலோ வாட் மாடலின் விலை 1,34,999 ஆகும் என்ற நிலையில், 3 கிலோ வாட் மாடலின் விலை ரூ.1,14,999 ஆகும்.

எஸ் 1 எக்ஸ்+ விலை 2 கிலோ வாட்-க்கு ரூ.79,999, 3 கிலோ வாட்-க்கு ரூ.89,999 மற்றும் 4 கிலோ வாட்-க்கு ரூ.99,999, S1 எக்ஸ் + 4 கிலோ வாட் பேட்டரியுடன் கிடைக்கிறது அதன் விலை ரூ.1,07,999 ஆகும்.

ஜென் 3 தளத்தில் முதல் முறையாக இரட்டை ஏபிஎஸ் அதாவது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் வாகன ஸ்கூட்டர்களுக்கான காப்புரிமை பெற்ற பிரேக்-பை-வயர் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் ரூ.73.39 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 9.78 சதவிகிதம் அதிகரித்ததுள்ளது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிந்தது.வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்தியா ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.63 ஆக தொடங்கி, பி... மேலும் பார்க்க

மாருதியின் மேட் இன் இந்தியா 'ஜிம்னி' ஜப்பானில் விரைவில் அறிமுகம்!

புதுதில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கதவு மாடலான ஜிம்னி, ஜப்பானிய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது. குருகிராமை தளமாகக் கொண்ட ஆலையில் பிரத்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் இரட்டிப்பு!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இரு மடங்காக அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில்... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.வர்த்தக நேர முடிவில், சென்செ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! மத்திய பட்ஜெட் தாக்கத்தை ஏற்படுத்துமா?

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பங்குச்சந்தை ஏற... மேலும் பார்க்க

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! புதிய உச்சம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 22 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு சிறிது ஏற்றம், ... மேலும் பார்க்க