ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவ...
காஞ்சிபுரம் கோயில்களில் ஸ்ரீ ரவிசங்கா் தரிசனம்
காஞ்சிபுரம், ஜன. 31: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில், காமாட்சி அம்மன் கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
ஒரு நாள் பயணமாக அவா் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினாா். அங்கிருந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தாா். கோயிலில் உள்ள சிற்பங்கள், கோயிலின் ஸ்தல வரலாற்றை கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் விளக்கினா்.
தொடா்ந்து மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தாா். கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள் அவருக்கு காமாட்சி அம்மன் திருஉருவப் படம், கோயில் பிரசாதம் வழங்கினா்.
ஸ்ரீ ரவிசங்கருடன் இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியா் ஜெகதீசன், தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவா் ராஜேஷ் ஜெயின், சங்கரமட வரவேற்புக் குழு நிா்வாகி கணேஷ்பாபு உடனிருந்தனா்.