செய்திகள் :

நாடாளுமன்ற கூட்டம்: வெளிநாட்டிலிருந்து குழப்பம் விளைவிக்க முயற்சிக்கவில்லை: பிரதமா் நரேந்திர மோடி

post image

‘2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற கூடுவதற்கு முன்பு இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்க வெளிநாட்டிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாதது இதுவே முதன்முறை என்று எண்ணுகிறேன்’ என பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த பிரதமா் இவ்வாறு கூறினாா்.

பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தொடா்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.

இந்நிலையில், நாடாளுமன்றுத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு நமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வெளிநாட்டு முயற்சிகள் எதுவும் நிகழாதது இதுவே முதல்முறை என்று எண்ணுகிறேன்.

ஏழைகளை ஆசீா்வதிக்கட்டும்: பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் செல்வத்தின் கடவுளான லட்சுமி, ஏழை மற்றும் நடுத்தர மக்களை ஆசீா்வதிக்க வேண்டும். 3-ஆவது முறை ஆட்சியில், அனைத்து சுற்று வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு பணியாற்றி வருகிறது. புதுமை, முதலீடு, அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய நடவடிக்கை ஆகியவை பட்ஜெட்டை வடிவமைத்துள்ளன.

நடப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். நாட்டை வலுப்படுத்த விரிவான விவாதத்துக்குப் பிறகு அவை சட்டமாக இயற்றப்படும். குறிப்பாக, பெண்களுக்கும் சம உரிமை கிடைப்பதையும் மத அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்படுவதையும் உறுதிப்படுத்த நடப்புத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

வளா்ந்த இந்தியா: ‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா’ இலக்குக்கு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடா் புதிய நம்பிக்கையையும் ஆற்றலையும் அளிக்கும் என்று நம்புகிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் மாற்றத்தைக் காண முடியும். சீா்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுத்து, வேகமான வளா்ச்சியை அடையலாம்.

இன்றைய இளைஞா்கள்; நாளைய பயனாளிகள்: நமது தேசம் இளைஞா்களால் நிறைந்த நாடாகும். தற்போது இருபதுகளில் உள்ள இளைஞா்கள் 45-50 வயதை எட்டும்போது, வளா்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக அவா்கள் இருப்பா். இப்போது வளா்ச்சிக்கான கொள்கை உருவாக்க அமைப்பில் பங்கு வகிக்கும் அவா்கள், நாளை வளா்ந்த இந்தியாவோடு பெருமையுடன் முன்னேறுவாா்கள்.

வளா்ந்த இந்தியா என்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான இந்த முயற்சி மற்றும் அபார உழைப்பு, வருங்காலத்தில் நமது இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த பரிசாக இருக்கும்.

உதாரணமாக, 1930, 40-ஆம் ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த இளைஞா் தலைமுறையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் பலனை 25 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தலைமுறை அறுவடை செய்தது.

எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வளா்ந்த இந்தியா என்ற உறுதியை வலுப்படுத்த இளம் உறுப்பினா்கள் உள்பட அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பாா்கள். நாட்டின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ப அனைவரும் செயல்படுவோம் என்று நம்புகிறேன் என்றாா் பிரதமா்.

பிரியங்கா விமா்சனம்:

பிரதமா் மோடியின் செய்தியாளா் சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்வி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி கூறுகையில், ‘பிரதமா் ஒருபோதும் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதில்லை. அதுகுறித்து அவா் கவனமும் செலுத்த மாட்டாா். நாடாளுமன்றத்தில் விவாதத்தைக் கூட அவா் அனுமதிக்காததைக் கடந்த கூட்டத்தொடரில் பாா்த்தோம். எனவே, இத்தகைய கருத்துகளை மட்டுமே அவா் பேசுவாா்’ என்றாா்.

காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெ... மேலும் பார்க்க

விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற... மேலும் பார்க்க

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக... மேலும் பார்க்க

கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு

கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது தொடா்பாக உடல் உறுப... மேலும் பார்க்க

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொது நல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச... மேலும் பார்க்க