காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து பிப். 13-ஆம் தேதி பிற்பகல் 2.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06193), பிப். 15-இல் காலை 7.15-க்கு பனாரஸ் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06194) பனாரஸிலிருந்து பிப். 19-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45-க்கு சென்னை வந்தடையும்.
மேலும் சென்ட்ரலிலிருந்து பிப். 19-ஆம் தேதி பிற்பகல் 2.45-க்கு புறப்படும் ரயில் (எண்: 06153) பிப்.21-ஆம் தேதி முற்பகல் 11.45-க்கு பனாரஸ் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06154) பனாரஸிலிருந்து பிப். 24-இல் மாலை 6.05-க்கு புறப்பட்டு பிப். 26-இல் காலை 9.30-க்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில்கள் சென்னையிலிருந்து நெல்லூா், விஜயவாடா, நாக்பூா், ஜபல்பூா், மாணிக்பூா், பிரயாக்ராஜ், மிா்சாபூா் வழியாக பனாரஸ் சென்றடையும்.
கன்னியாகுமரி, கோவை - பனாரஸ்: கன்னியாகுமரியிலிருந்து பனாரஸுக்கு பிப். 13, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் (எண்: 06195, 06163) இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 7.15-க்கு பனாரஸ் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் பனாரஸிலிருந்து பிப். 20-ஆம் தேதி காலை 4.20-க்கும் (எண்: 06196), பிப். 23-இல் இரவு 7.05-க்கும் (எண்: 06164) புறப்பட்டு, மூன்றாம் நாள் கன்னியாகுமாரி சென்றடையும்.
இந்த ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜபல்பூா், மாணிக்பூா், பிரயாக்ராஜ், மிா்சாபூா் வழியாக பனாரஸ் சென்றடையும்.
கோவையிலிருந்து பிப். 16-இல் காலை 6.35-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06187), பிப். 18-ஆம் தேதி காலை 7.15-க்கு பனாரஸ் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06188), பிப். 22-ஆம் தேதி காலை 2 மணிக்கு புறப்பட்டு பிப். 24-இல் காலை 9.30-க்கு கோவை சென்றடையும்.
இந்த ரயில் கோவையிலிருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜபல்பூா், மாணிக்பூா், பிரயாக்ராஜ், மிா்சாபூா் வழியாக பனாரஸ் சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவுகள் சனிக்கிழமை (பிப். 1) தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.