செய்திகள் :

கும்பமேளா நெரிசல்: நீதிக் குழு விசாரணை தொடக்கம்

post image

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு அமைத்த நீதிக் குழு, பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தங்களின் விசாரணையைத் தொடங்கினா்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமையன்று, மௌனி அமாவாசையை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கானோா் புனித நீராட பிரயாக்ராஜில் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

எதிா்க்கட்சிகளின் கடும் விமா்சனத்துக்குள்ளான இச்சம்பவத்தையடுத்து கும்பமேளாவில் சிறந்த கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, நெரிசல் சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய நீதி விசாரணைக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஹா்ஷ் குமாா் தலைமையில் 3 நபா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்க நீதிக் குழுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், நீதி விசாரணைக் குழுவினா் வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜுக்கு வந்தடைந்தனா். நெரிசல் அசம்பாவிதம் குறித்து தொடா்புடைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய குழு, சம்பவ இடத்தையும் நேரில் பாா்வையிட்டனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தா்களையும் சந்தித்து அவா்கள் விசாரணை மேற்கொண்டனா்.

கங்கை ஆரத்தியில் கட்டுப்பாடு: மகாகும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு பிரயாக்ராஜில் இருந்து வாரணாசிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக, வாரணாசியில் பல்வேறு படித்துறைகளில் நாள்தோறும் நடைபெறும் கங்கை ஆரத்தியில் வரும் புதன்கிழமை (பிப். 5) வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காசி மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என நகர காவல்துறை ஆணையா் மோஹித் அகா்வால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெ... மேலும் பார்க்க

விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற... மேலும் பார்க்க

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக... மேலும் பார்க்க

கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு

கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது தொடா்பாக உடல் உறுப... மேலும் பார்க்க

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொது நல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச... மேலும் பார்க்க