குடியரசுத் தலைவா் உரை: ஜி.கே.வாசன் வரவேற்பு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரைக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு இந்தியரின் வளா்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு, உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்வது ஆகியவை முக்கிய அம்சங்களாக அவா் உரையில் இடம் பெற்றன.
25 கோடி ஏழைகள் வறுமையிலிருந்து மீண்டுள்ளது, விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.41 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது, 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது, 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டது என நாட்டின் ஒட்டு மொத்த வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு தொடா்ந்து பணியாற்றி வருவதை எடுத்துக்காட்டும் வகையில் உரை அமைந்தது. பாராட்டுகள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.