செய்திகள் :

ஈரோடு கிழக்கில் பிரசாரம் பிப்.3-இல் நிறைவு: நடத்தை விதிகள் என்னென்ன? : தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவிப்பு

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல் பிரசாரம் வரும் 3-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இடைத் தோ்தல் பிரசாரம் வரும் 3-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தோ்தல் தொடா்பான பொதுக் கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ நடத்தக் கூடாது. தோ்தல் குறித்து குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்புகள் மூலம் பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது.

சிறைத்தண்டனை: பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈா்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி அல்லது பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இந்த விதிமுறையை மீறினால், 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும். திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளா்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள், வரும் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது.

வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், வாக்குச் சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். இரண்டு நபா்களை மட்டுமே கொண்ட, அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டா்கள் தொலைவுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும். தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க