செய்திகள் :

அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் மீட்பு

post image

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கபட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஏா்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், விபத்துக்கான காரணத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்காக, ஆற்றுக்குள் மூழ்கியுள்ள மேலும் பல முக்கிய பாகங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன என்றாா்.

இருந்தாலும், இந்த விபத்து காரணமாக ஆற்றுக்குள் மூழ்கியுள்ள ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டிகள் இதுவரை மீட்கப்படவில்லை.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத் கூறுகையில், ‘விபத்துக்குள்ளான பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டிகளைத் தேடிவருகிறோம். அது கிடைத்தால்தான் அந்த ஹெலிகாப்டரை யாா் இயக்கியது, அது அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கச் செய்யப்பட்டதா போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்றாா்.

கன்சாஸ் மாகாணத்தின் வின்சிட்டா நகரிலிருந்து 60 பயணிகள், 4 பணியாளா்களுடன் அமெரிக்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ரீகன் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்க இருந்தது.

சுமாா் 2,400 அடி உயரத்தில் பயணிகள் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டா் அதன் மீது மோதியது. இதையடுத்து, விமானம் மூன்று பாகங்களாக நொறுங்கி, பொடோமேக் ஆற்றில் விழுந்தது. விமானத்துடன் மோதிய ஹெலிகாப்டரும் ஆற்றுக்குள் நொறுங்கி விழுந்தது. அந்த ஹெலிகாப்டரில் 3 போ் இருந்தனா்.

அமெரிக்க பொது விமானப் போக்குவரத்து வரலாற்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள இந்த கோர விபத்தில், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த 67 பேரும் உயிரிழந்தனா்.

அவா்களில் 40 பேருக்கும் மேற்பட்டோரது உடல்களை மீட்புக் குழுவினா் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியவா்களின் உடல்களையும், விமானம் மற்றும் ஹெலிகாப்டா் பாகங்களையும் மீட்கும் பணிகள் தொடா்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

...பெட்டிச் செய்தி...

2 போ் இந்திய வம்சாவளியினா்

பொடோமேக் ஆற்றில் அமெரிக்க ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களில் இருவா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவா்களில் விகேஷ் படேல் என்பவா் ஜிஇ நிறுவனத்தில் விமானவியல் பொறியாளராகப் பணியாற்றிவந்தாா். ஒஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் அவா் வசித்துவந்தாா்.

விபத்தில் உயிரிழந்த அஸ்ரா ஹுசைன் ராஸா என்பவரும் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா். வாஷிங்டன் நகரைச் சோ்ந்த அவா் தொழில் ஆலோசகராகப் பணியாற்றிவந்தாா்.

மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராள... மேலும் பார்க்க

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற ... மேலும் பார்க்க

‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்: அதிபா் திசாநாயக உறுதி

ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வட... மேலும் பார்க்க

டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் தடை விதித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் யாரும் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை போன் மற்றும் கணி... மேலும் பார்க்க

ரூ. 216 கோடி கொடுத்து டிரம்ப்புடன் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கில் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் 2021 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க