‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்
தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க தகவல் தொழில்நுட்பங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவம் வகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் சேவைகளை அளிக்கும் அந்த செயலி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிற அரசுத் துறைகளிலும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.