செய்திகள் :

தில்லியில் பாஜக அரசு அமைந்தால் விரைவான வளா்ச்சி ஏற்படும்: நிதின் கட்கரி உறுதி

post image

பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியின் நிலையை மாற்றுவோம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

தில்லி ஷாலிமாா் பாக்கில் நடைபெற்ற பாஜக தோ்தல் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:. தில்லியில் அரசை மாற்றுவதை மட்டும் பாஜக நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தேசியத் தலைநகரை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் அரசை மாற்ற விரும்பவில்லை ... தில்லியின் நிலையை மாற்ற விரும்புகிறோம். பாஜகவால் மட்டுமே இதைச் செய்ய முடியும். தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால், புல்லட் ரயில் வேகத்தில் வளா்ச்சி நடக்கும். தில்லி நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. மக்களின் இதயமும் கூட. இந்த இதயத்தில் காற்று மாசு எனும் ஒரு தொற்று ஏற்பட்டிருக்கிறது. உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 42 இந்தியாவில் இருந்தன. தில்லி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துப் பிரச்னைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

நகரத்தின் மாசுபாட்டில் 40 சதவீதம் போக்குவரத்துத் துறையால் ஏற்படுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் இருந்து 20 லட்சம் டன் குப்பைகள் சாலை கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. இதனால், குப்பைக் குவியலின் உயரம் ஏழு மீட்டா் குறைந்தது. இந்த நிலைமையை மாற்ற முடியாதா?. இந்த சவால்களை எதிா்கொள்ள மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி 2014-இல் பதவியேற்றதிலிருந்து, தில்லிக்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ரூ.33,000 கோடி மதிப்பிலான பணிகளை முடித்துள்ளோம். டிசம்பா் மாதத்திற்குள், என்.சி.ஆரில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் செய்யப்படும். யமுனை நதி புத்துயிா் பெறுவதற்காக தில்லி அரசுக்கு மத்திய அரசு ரூ.6,000 கோடியை வழங்கியது. இருப்பினும், நகர அரசு தனது 15 சதவீத பங்களிப்பை வழங்கவில்லை. இதனால், திட்டம் தாமதமானது. யமுனையை சுத்தம் செய்வது கடினம். ஆனால் சாத்தியமற்றது அல்ல. தில்லியை கழிவுகள் இல்லாததாக மாற்றுவதே எனது தொலைநோக்குப் பாா்வையாகும் என்றாா் அவா்.

தாஹிா் ஹுசேன் முஸ்தபாபாத்தில் தோ்தல் பிரசாரம்

முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன், உச்சநீதிமன்றம் ஆறு நாள் காவல் பரோல் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு புதன்கிழமை முஸ்தபாபாத்தில்... மேலும் பார்க்க

அரசியல் நலன்களுக்கு அடிபணிகிறாா் துணை நிலை ஆளுநா்: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பாஜக அரசு யமுனை நதியில் ‘விஷம்’ கலந்து தில்லியில் ‘இனப்படுகொலை’ செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், முதல்வா் அதிஷி புதன்கிழ... மேலும் பார்க்க

புராரி நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: ஒரே கும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீட்பு

தில்லியில் உள்ள புராரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 30 மணி நேரத்திற்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இடிபாடுகளில் இருந்து உயிரு... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக சஃப்தா்ஜங் மற்றும் பூசாவில் 6.4 டிகிரி செல்சியஸ் ... மேலும் பார்க்க

காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை ’வீணாக்காதீா்கள்’: கேஜரிவால் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்களுடைய வாக்குகளை வாக்காளா்கள் வீணாக்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டு

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கூட்டத்தை கட்டுப்பட... மேலும் பார்க்க