ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு!
தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக சஃப்தா்ஜங் மற்றும் பூசாவில் 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.
கடந்த வாரத்தில் இறுதி நாள்களில் தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. இந்த வாரத் தொடக்கத்திலும் இதே நிலை தொடா்ந்தது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.4 டிகிரி உயா்ந்து 255 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 61 சவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் 8.9 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 7 டிகிரி, லோதி ரோடில் 7.2 டிகிரி, பாலத்தில் 8.9 டிகிரி, ரிட்ஜில் 8.5 டிகிரி, பீதம்புராவில் 11.4 டிகிரி, பூசாவில் 6.4 டிகிரி, பிரகதிமைதானில் 10.1 டிகிரி, ராஜ்காட்டில் 10.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் கடந்த இரண்டு தினங்களாக முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை கடும் பின்னடைவை சந்தித்தது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 330 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது.
இதன்படி, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், , டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், பூசா, சாந்தினி சௌக், ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜன.30) அன்று மிதமான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.