செய்திகள் :

காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை ’வீணாக்காதீா்கள்’: கேஜரிவால் வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்களுடைய வாக்குகளை வாக்காளா்கள் வீணாக்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினாா்.

தில்லி பாத்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் நடைபெற்ற ‘ஜனசபா’ என்ற மக்கள் மேடை பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கேஜரிவால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக காங்கிரஸ் செயல்படுவதாக அதன் பெயரைக் குறிப்பிடாமல் சாடினாா்.

இது தொடா்பாக கேஜரிவால் மேலும் பேசியதாவது: காங்கிரஸுக்கு உங்கள் வாக்குகளை ஏன் வீணாக்க வேண்டும்? இந்தத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. அவ்வாறு செய்தால் அது ஆம் ஆத்மியின் வாக்குகளை குறைப்பது போலாகும். காங்கிரஸும் பாஜகவும் இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க மறைமுகமாக இணைந்துள்ளன. உங்களுடைய வாக்கு ஒருவரை வெற்றி பெறச் செய்வதற்காக இருக்க வேண்டுமேயொழிய தோற்கடிப்பதற்காக இருக்கக் கூடாது.

தில்லியில் உள்ள பெண்களில் 70 சதவீதம் போ் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆண்கள் பெரும்பாலும் பாஜக மற்றும் காங்கிரஸால் ’கவனச் சிதறலுக்கு ஆளாகிறாா்கள். எனவே, நல்லாட்சியை விரும்பும் பெண்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள ஆண்களை ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றாா் கேஜரிவால்.

பாத்லி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவரான தேவேந்தா் யாதவுக்கு எதிராக தற்போதைய எம்எல்ஏ அஜேஷ் யாதவை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியுள்ளது. கடந்த இரண்டு தோ்தல்களில் (2015 மற்றும் 2020) அஜேஷ் யாதவ் இங்கு வெற்றி பெற்றுள்ளாா். அவருக்கு முன்னதாக, தேவேந்தா் யாதவ் 2008 மற்றும் 2013- ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவா். இந்தத் தொகுதியில் பாஜக தனது வேட்பாளராக தீபக் செளத்ரியை நிறுத்தியுள்ளது.

ஷீலா தீட்சித்தின் கீழ் 15 ஆண்டுகள் தில்லியைத் தொடா்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ், இழந்த இடத்தை மீண்டும் பெறும் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகிறது, அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டையும் எதிா்த்துப் போராடுகிறது.

தாஹிா் ஹுசேன் முஸ்தபாபாத்தில் தோ்தல் பிரசாரம்

முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன், உச்சநீதிமன்றம் ஆறு நாள் காவல் பரோல் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு புதன்கிழமை முஸ்தபாபாத்தில்... மேலும் பார்க்க

அரசியல் நலன்களுக்கு அடிபணிகிறாா் துணை நிலை ஆளுநா்: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பாஜக அரசு யமுனை நதியில் ‘விஷம்’ கலந்து தில்லியில் ‘இனப்படுகொலை’ செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், முதல்வா் அதிஷி புதன்கிழ... மேலும் பார்க்க

புராரி நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: ஒரே கும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீட்பு

தில்லியில் உள்ள புராரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 30 மணி நேரத்திற்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இடிபாடுகளில் இருந்து உயிரு... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக சஃப்தா்ஜங் மற்றும் பூசாவில் 6.4 டிகிரி செல்சியஸ் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டு

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கூட்டத்தை கட்டுப்பட... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் ‘இடைவினை மன்றகம்’ தொடக்கம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தில்லி மத்திய ரோட்டரி கிளப்போடு இணைந்து இடைவினை மன்றகம் (இன்ட்ராக்ட் கிளப்) செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது. இம்மன்றத்தின் நோக்... மேலும் பார்க்க