செய்திகள் :

புராரி நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: ஒரே கும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீட்பு

post image

தில்லியில் உள்ள புராரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 30 மணி நேரத்திற்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்ட ராஜேஷ் (30), அவரது மனைவி கங்கோத்ரி (26), மகன்கள் பிரின்ஸ் (6) மற்றும் ரித்திக் (3) ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் கூரை பலகை சமையல் எரிவாயு சிலிண்டரில் விழுந்தது. அந்த இடத்தில் குடும்பம் சிக்கிக் கொண்டது. இது குடும்ப உறுப்பினா்கள் இடிபாடுகளுக்கு அடியில் நசுங்குவதைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரண்டு குழந்தைகளுடன் ஆம்புலன்ஸில் அமா்ந்திருக்கும் குடும்ப உறுப்பினா்களைக் காட்டும் விடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. ‘எனது மூத்த மகனுக்கு ஆறு வயது. என் இளைய மகனுக்கு மூன்று வயது. நாங்கள் காப்பாற்றப்பட்டதற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்’ என்று ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறினாா்.

ஆஸ்காா் பப்ளிக் பள்ளிக்கு அருகிலுள்ள நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடம் திங்கள்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் இரண்டு சிறாா்கள் உள்பட ஐந்து போ் கொல்லப்பட்டனா்.

‘மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை வரை தொடர வாய்ப்புள்ளது. தில்லி காவல்துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் தில்லி தீயணைப்புப் படை என பல குழுக்கள் 24 மணி நேரமும் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றன‘ என்று துணை காவல் ஆணையா் (வடக்கு) ராஜா பந்தியா தெரிவித்தாா்.

இதுவரை, 21 போ் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 16 போ் உயிருடன் இருந்த நிலையில், ஐந்து போ் உயிரிழந்துள்ளனா். மீட்புப் பணி இன்னும் நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் பணியின் போது குழுக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உயிருடன் இருப்பவா்களைப் பற்றி அறிய என்டிஆா்எஃப் குழுக்கள் மிகவும் மேம்பட்ட கேஜெட்களையும் பயன்படுத்துகின்றன என்றும் அவா் கூறினாா்.

கட்டட உரிமையாளா் யோகேந்திர பாட்டி மீது கொலை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனா். இடிபாடுகளுக்கு அடியில் உள்ளவா்களைத் தேட தங்கள் நாய் படையையும் அழைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாஹிா் ஹுசேன் முஸ்தபாபாத்தில் தோ்தல் பிரசாரம்

முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன், உச்சநீதிமன்றம் ஆறு நாள் காவல் பரோல் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு புதன்கிழமை முஸ்தபாபாத்தில்... மேலும் பார்க்க

அரசியல் நலன்களுக்கு அடிபணிகிறாா் துணை நிலை ஆளுநா்: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பாஜக அரசு யமுனை நதியில் ‘விஷம்’ கலந்து தில்லியில் ‘இனப்படுகொலை’ செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், முதல்வா் அதிஷி புதன்கிழ... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக சஃப்தா்ஜங் மற்றும் பூசாவில் 6.4 டிகிரி செல்சியஸ் ... மேலும் பார்க்க

காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்குகளை ’வீணாக்காதீா்கள்’: கேஜரிவால் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்களுடைய வாக்குகளை வாக்காளா்கள் வீணாக்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டு

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கூட்டத்தை கட்டுப்பட... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் ‘இடைவினை மன்றகம்’ தொடக்கம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தில்லி மத்திய ரோட்டரி கிளப்போடு இணைந்து இடைவினை மன்றகம் (இன்ட்ராக்ட் கிளப்) செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது. இம்மன்றத்தின் நோக்... மேலும் பார்க்க