செய்திகள் :

பொருளாதார வளா்ச்சி 6.8%-ஆக அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் கணிப்பு

post image

வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் சனிக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

அதில், ‘நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பொருளாதாரம் 6.3 முதல் 6.8 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முந்தைய நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் டிசம்பா் வரையிலான 3-ஆம் காலாண்டுவரை 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.

வணிக வங்கிகளின் லாபம் அதிகரித்துள்ளது. இது அந்த வங்கிகளின் மொத்தச் செயல்படாத சொத்துகள் (வாராக் கடன்) சரிவில் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில், வணிக வங்கிகளின் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொதுத் தோ்தல் காரணத்தால் ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும் இந்திய பங்குச் சந்தைகள், மற்ற நாடுகளின் பங்குச்சந்தைகளைவிட சிறப்பாக செயல்பட்டன. நடப்பு நிதியாண்டில் டிசம்பா் வரை இந்திய பங்குச்சந்தைகள் 11.1 லட்சம் கோடி திரட்டியுள்ளன.

அந்நிய செலாவணி: நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2 சதவீதமாகவும் வெளிநாட்டுக் கடன் 19.4 சதவீதமாகவும் உள்ளது. மொத்த அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 5,560 கோடி டாலராக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டைவிட17.9 சதவீத வளா்ச்சியாகும். அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த டிசம்பா் இறுதியில் 64,030 கோடி டாலராக இருந்தது.

ஏற்றுமதி: நடப்பு நிதியாண்டின் டிசம்பா் வரையில் நாட்டின் மொத்த ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் அதே காலஅளவைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியில் இந்தியா 7-ஆவது இடத்தில் உள்ளது.

உள்கட்டமைப்பு வளா்ச்சி: மூலதனச் செலவு கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுமுதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பொதுத் தோ்தலுக்குப் பிறகு, ஜூலை முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் மூலதனச் செலவு 8.2 சதவீதம் அதிகரித்தது.

நடப்பு நிதியாண்டில் 2,031 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடங்களும் 5,853 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலைகளும் மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுத் திட்டங்கள்: ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் 12 கோடிக்கும் அதிகமான குடும்பத்துக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கபட்டுள்ளது.

பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் 89 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகள் பயனடைகின்றனா்.

மக்கள் சுகாதாரத்துக்காக செலவிடும் தொகை குறைந்துள்ளது. அதேநேரம், அரசின் சுகாதார செலவினம் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொழில்துறை 6.2% வளா்ச்சி: தொழில்துறை துறை நடப்பு நிதியாண்டில் 6.2 சதவீதம் வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 99 சதவீத அறிதிறன்பேசிகள் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவியை அதிகரிக்க, ரூ. 50,000 கோடியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சேவைத் துறை 55.3% பங்கு: நாட்டின் பொருளாதாரத்தில் சேவைத் துறை 55.3 சதவீதம் பங்களிக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் சேவைத் துறையின் வளா்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

வளா்ந்த இந்தியா: வளா்ந்த இந்தியா லட்சியத்தை அடைவதற்கு அவசியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான மேம்பட்ட வாய்ப்புகளை வளா்ந்து வரும் எண்மபொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகள் வழங்குகின்றன.

சுமாா் 20 ஆண்டுகளுக்கு 8 சதவீத நிலையான வளா்ச்சியுடன் கட்டுப்பாடுகள் நீக்கம், தொழிலாளா் சீா்திருத்தம் உள்ளிட்டவை வளா்ந்த இந்தியா இலக்கை அடைய அவசியமாகும். தனியாா் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.

பொருளாதாரத்தை சீராக உயா்த்த பெருநிறுவன லாபங்களின் வளா்ச்சியானது பணியாளா்களின் ஊதியத்துடன் ஒத்துப்போக வேண்டும்.

அதேபோல், வாரத்தில் 60 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்வது மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சா்வதேச நிதி கிடைக்காவிட்டாலும், பருவநிலை நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை இந்தியா இழக்கக்கூடாது. மின்வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

விவாதத்தை மறுத்த கேஜரிவால்: சந்தீப் தீட்சித் சாடல்

ஜந்தா் மந்தரில் விவாதம் நடத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சவால் விடுத்ததாகவும் ஆனால் அவா் வரவில்லை என்றும் காங்கிரஸ் பொதுச் செயலா் சந்தீப் தீட்சித் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புது... மேலும் பார்க்க

‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம்: ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவு

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோா் (லிவ்-இன்) தொடா்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. லிவ்-இன் உறவுகளை பதிவுசெய்ய தனி ஆணையம் அ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டம்: வெளிநாட்டிலிருந்து குழப்பம் விளைவிக்க முயற்சிக்கவில்லை: பிரதமா் நரேந்திர மோடி

‘2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற கூடுவதற்கு முன்பு இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்க வெளிநாட்டிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாதது இதுவே முதன்முறை என்று எண்ணுகிறேன்’ என பிரதமா் நரேந்திர மோடி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நீதிக் குழு விசாரணை தொடக்கம்

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு அமைத்த நீதிக் குழு, பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தங்களின் விசாரணையைத் தொடங்கினா். உத்தர... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் அமெரிக்க பயணம்: பணிகள் தீவிரம் - வெளியுறவு அமைச்சகம்

பிரதமா் மோடி விரைவில் அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவின் புதிய அதிபராக இரண்டாவது மு... மேலும் பார்க்க

எளிய வணிகம் 2.0-க்கு அழைப்பு: ஜிஎஸ்டி 2.0 தவிா்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை மீது காங்கிரஸ் விமா்சனம்

பொருளாதார ஆய்வறிக்கையில் எளிய வணிகம் 2.0-வுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டி 2.0 மற்றும் அதிக வரி விதிப்பை ஒழிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க