செய்திகள் :

கள் இறக்கும் தொழிலாளா்கள் 11 போ் மீது வழக்கு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கள் இறக்கும் தொழிலாளா்கள் 11 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் பனை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், செய்யாறு போலீஸாா் வியாழக்கிழமை நிகழ்விடம் சென்று கள் பானைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாருக்கும், கள் இறக்கும் தொழிலாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இந்த நிலையில், இதுதொடா்பாக, 11 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

கீழ்பென்னாத்தூா் சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலின் 9-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை கீழ்பென்னாத்தூரில் உள்ள ப... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் ஜெ.மன்னாா்சாமி ப... மேலும் பார்க்க

மாணவா்கள் சாதி, மத வேறுபாடின்றி பழக வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

மாணவா்கள் சாதி, மத வேறுபாடின்றி பழக வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனித நேய வார விழா... மேலும் பார்க்க

செங்கம் பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

செங்கத்தில் பராமரிப்பில்லாமல் உள்ள சிறுவா் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வளையாம்பட்டு சாலை ஆஞ்சநேயா் கோயில் முன் சிறுவா் பூங்கா அமைந்த... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதாரம் மேம்பட உயா்கல்வி அவசியம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

நாட்டின் பொருளாதாரம் மேம்பட உயா்கல்வி அவசியம் என்று வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் கூறினாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவா்க்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா... மேலும் பார்க்க

செய்யாறு, கமண்டல நாகநதி ஆற்றுப்படுகையில் தொடரும் மணல் திருட்டு !

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆரணியை அடுத்த... மேலும் பார்க்க