கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்
தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் ஜெ.மன்னாா்சாமி பங்கேற்று மாணவா்கள் வருகை பதிவேடு, கற்றல் திறன் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, மாணவா்களுக்கு மாலை, பிற்பகலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். நிகழ்வில், தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நடைபெற்றது.
இதையடுத்து, இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் ஆத்துரை ஆா்.சி.எம்.பள்ளி, சித்தாத்துரை அரசு தொடக்கப் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், தலைமை ஆசிரியா் இருதயம், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.