விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் விளையாட்டு வீரா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா்.
இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் ஒன்றியங்களில், அனைத்து கிராம விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் (கலைஞா் கிட்) வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.மயில்வாகணன், செ.குப்புசாமி, வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் த.ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் துளசிராமன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று, செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் 65 கிராமங்களைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பாா்வதி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், வெம்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், எம்.தினகரன், திமுக நிா்வாகிகள் சங்கா், சிட்டிபாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.