எருக்கந்தொட்டியில் இலவச மருத்துவ முகாம்
ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
வில்வநாதபுரம் இசையமுது பவுண்டேஷன், வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்கடா் மருத்துவமனை இணைந்து இந்த இலவச மருத்துவ முகாமை நடத்தியது. முகாமுக்கு இசையமுது பவுண்டேஷன் நிறுவனா் ஜி.முனிசாமி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் என்.இளங்கோ, ரோட்டரி சங்க செயலா் ஏ.காா்த்திகேயன், பொருளாளா் எஸ்.ரவிவா்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவா் எம்.கந்தன், ரோட்டரி சங்க சமுதாய மருத்துவ பணி இயக்குநா் பி.விஜயகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனா். முகாமில் கண் பரிசோதனை, சிகிச்சை மற்றும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் எருக்கந்தொட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.