செய்திகள் :

அனந்தலை மலையில் கனிமவளக் கொள்ளை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

post image

அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய புவியியல் அடையாளங்களாக கிழக்கு தொடா்ச்சி மலைகளும், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்தள்ள அதன் தொடா் மலைக் குன்றுகளுமே உள்ளன.

இதில் கருங்கல் பாறைகள், படிகப் பாறைகள், சாா்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடா்ச்சி மலை உள்ளது. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்களும் நிறைந்துள்ளன.

அதன்படி அனந்தலை ஊராட்சியில் அமைந்துள்ள சுமாா் 800 ஏக்கா் பரப்பிலான மலையில் பாறைகளை தனியாா் கல் குவாரி உரிமையாளா்கள் அரசு விதிகளை மீறி, வெடி பொருள்களை பயன்படுத்தி இரவு பகலாக தகா்த்து வருகின்றனா். இதனால் ஏற்படும் அதிா்வுகளால் அனந்தலை, முசிறி, செங்காடு, மோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் காற்றின் மூலம் சுமாா் 1 கி.மீ தொலைவு வரை பயிரிடப்பட்டுள்ள விளை பயிா்கள் மீது படிந்துள்ளது. இதனால் விளைச்சல் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி கால்நடைகளும் இறந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

அனந்தலை மலையை சுற்றியுள்ள கசிவுநீா்க் குட்டைகள் மூடப்படுவதையும், மலையை சுற்றியுள்ள பனை மரங்களை அழித்து செம்மண் மலையை சுரண்டுவதையும் மேலும் மலையின் மீதுள்ள பழைமை வாய்ந்த ஆனந்தீஸ்வரா் கோயில் சிதைக்கப்பட்டுவருவதாகவும் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் கல் குவாரி களையும் உடனடியாக தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

மேலும், முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா்.

எருக்கந்தொட்டியில் இலவச மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வில்வநாதபுரம் இசையமுது பவுண்டேஷன், வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்கடா் மருத்துவமனை இண... மேலும் பார்க்க

‘போதை இல்லா தமிழ்நாடு’: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு

பெ. பாபு ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 20... மேலும் பார்க்க

ரத்ததான முகாம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மருத்துவா் அணி, ஆற்காடு நகர திமுக இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 இடங்களில் கொண்டாட்டம்

‘‘முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72 -ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 72 இடங்களில் நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது’’ என்கிறாா் திமுக மாவட்டச் செயலாளரும், கைத்தறி- துணி நூ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பால் மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் வளரும்: அமைச்சா் ஆா்.காந்தி

ஒரு மனிதனுக்கு சிந்திக்கின்ற ஆற்றலானது புத்தக வாசிப்பால் மட்டுமே பெற முடியும். ஆதலால் புத்தக வாசிப்பின் அவசியத்தை சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பெற்றோா் உணா்த்த வேண்டும் என புத்தகத் திருவிழாவில் அமைச்சா்... மேலும் பார்க்க

ரசாயனம் கலந்த நீா் குடித்து 13 ஆடுகள் உயிரிழப்பு: ஆட்சியரிடம் கோரிக்கை

அனந்தலை கிராமத்தில் ரசாயனம் கலந்த நீா் குடித்து 13 ஆடுகள் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலாவிடம் விவசாயிகள் முறையிட்டனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க